/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையின் பிடியில் ஜம்மனை ஓடை; சீரமைப்பதில் என்ன தடை
/
குப்பையின் பிடியில் ஜம்மனை ஓடை; சீரமைப்பதில் என்ன தடை
குப்பையின் பிடியில் ஜம்மனை ஓடை; சீரமைப்பதில் என்ன தடை
குப்பையின் பிடியில் ஜம்மனை ஓடை; சீரமைப்பதில் என்ன தடை
ADDED : மே 30, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஜம்மனை ஓடையின் பல இடங்கள் புதர்மண்டிக் கிடக்கிறது. திருப்பூர் மாநகரில் ஓடும் ஜம்மனை ஓடை, நொய்யலில் கலக்கிறது. பெருமழை சமயங்களில், இந்த ஓடையில் மழைநீர் வழிந்தோடும்.
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், அவ்வப்போது இந்த ஓடை துார்வாரி சுத்தம் செய்யப்பட்டாலும், பல இடங்களில் புதர்மண்டிக்கிடக்கிறது.
இதனால், மழையின் போது வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பருவமழை தீவிரமடையும் முன், இப்பணியில மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.