sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துார்வாராத ஜம்மனை ஓடை' . இறைச்சி கழிவால் சுகாதாரத்துக்கு தடை! மண்டல தலைவர் வார்டில் 'மாளாத' பிரச்னை

/

துார்வாராத ஜம்மனை ஓடை' . இறைச்சி கழிவால் சுகாதாரத்துக்கு தடை! மண்டல தலைவர் வார்டில் 'மாளாத' பிரச்னை

துார்வாராத ஜம்மனை ஓடை' . இறைச்சி கழிவால் சுகாதாரத்துக்கு தடை! மண்டல தலைவர் வார்டில் 'மாளாத' பிரச்னை

துார்வாராத ஜம்மனை ஓடை' . இறைச்சி கழிவால் சுகாதாரத்துக்கு தடை! மண்டல தலைவர் வார்டில் 'மாளாத' பிரச்னை


ADDED : ஏப் 02, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டாலர் சிட்டி' என்று பெயர் பெற்றிருந்தாலும் கூட, திருப்பூர் நகரப்பகுதிகளில் சில பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. குறிப்பாக, மோசமான சாலைகள், தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை மேலாண்மை போன்றவற்றில் மாநகராட்சி இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வகையில், மாநகராட்சி பகுதியிலுள்ள, 60 வார்டுகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அலசும் பகுதி தான் இது. 'வாரம் ஒரு வார்டு' என்ற இப்பகுதியில், 41வது வார்டிலுள்ள பிரச்னைகள் குறித்து பார்க்கலாம்.

முருகம்பாளையம் ஊராட்சியில் 4வது வார்டு பகுதி, எல்.ஆர்.ஜி., கல்லுாரி, இந்திரா நகர், பல்லடம் ரோடு மேற்கு, குப்பாண்டம்பாளையம் ஐ.ஜி., காலனி, சுண்டமேடு, கரைப்புதுார் ரோடு, ஜம்மனை ஓடை ஆகியவை இந்த வார்டில் அமைந்துள்ளன.

வார்டின் முக்கிய சந்திப்பு, ரிங்ரோடுகளில் சாலை வசதி ஓரளவு பரவாயில்லை. சுண்டமேடு, இந்திரா நகர், தமிழ்நாடு தியேட்டர் பின் வீதி உள்ளிட்ட இடங்களில் ரோடு சுத்த மோசம். ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. குப்பாண்டம்பாளையம் செல்லும் ரோடு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அருகே, வளைவில் சாலை சேதமாகியுள்ளது. கால்வாய் வசதியின்றி கழிவுநீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. வார்டில் குடிநீர் பிரச்னை உள்ள நிலையில், குப்பாண்டம்பாளையம், சுண்டமேடு சந்திப்பு வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

சுற்றுச்சூழலுக்கு கேடு


பல்லடம் ரோடு - மங்கலம் ரோட்டை இணைக்கும் இந்த வார்டில் கிராமப்புற சாலைகளை விட, பிரதான ரோடுகள் தான் அதிகம். தொடர்ச்சியான வாகன போக்குவரத்து இருப்பதுடன், சுற்றிலும் சாய ஆலை, பிளீச்சிங் நிறுவனங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. வெளிமாவட்டத்தினர், பிற மாநிலத்தவர் பணியாற்றுவதால், முன்னெச்சரிக்கையாக, முருகம்பாளையம் செல்லும் ரோட்டில், சோதனைச்சாவடி, போலீஸ் உதவி மையம் திறக்கப்பட்டது. இம்மையம் திறப்பதுமில்லை. செயல்படுவதும் இல்லை என்கின்றனர் வார்டு பொதுமக்கள்.

கண்காணிப்பு இல்லாததால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சாய ஆலை சாம்பல் கழிவுகளை மக்கள் நடமாடும் பகுதிகளில் கூட மலைப்போல் குவித்து செல்கின்றனர். ஈரமாக கொட்டப்படும், இவை காய்ந்து காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் கண்களில் நிறைவதுடன், நெடியையும் ஏற்படுத்துகிறது. வார்டில் உள்ள மயானங்களுக்கு முட்புதர்கள் மண்டி, குற்றச்செயல்களுக்கு உதவும் இடமாக மாறிவருகிறது.

வார்டின் இதயப்பகுதியாக சுண்டமேடு உள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் பாறைக்குழி உள்ளது. பத்தடி கழிவுநீர் தேங்கியுள்ள இக்குழியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியாவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. பாறைக்குழி கழிவுநீரை வெளியேற்றிட வேண்டும். மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஓடைக்கு புத்துயிர் கிடைக்குமா


ஜம்மனை ஓடை துார்வாரி, நான்கு ஆண்டுகளாகிறது. முட்புதர் செடியாக வளர்ந்து, மரமாகவே மாறி விட்டது. மழை வெள்ளம் வந்தால், போக்குவரத்து தடைபடும், வீடுகள், நிறுவனங்களுக்குள் வெள்ள நீர் செல்லும் அளவுக்கு நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கோழி மற்றும் இறைச்சிக் கழிவுகள் ஓடையிலேயே கொட்டுவதால், அவற்றை சாப்பிட நாய்கள் கூட்டமாகவே சுற்றித்திரிகிறது. நாய்த்தொல்லை வார்டின் தலையாய பிரச்னையாக உள்ளது. பல்லடம் ரோடு, இந்திராநகரில் குப்பை முறையாக அள்ளுவதில்லை. ஆள்ஆராவற்ற இடங்களில் குப்பைகளுடன் மருத்துவ கழிவுகள் வீசியெறியப்படுகிறது.






      Dinamalar
      Follow us