/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொலை வழக்கில் ஜாமின்; தலைமறைவு ஆசாமி கைது
/
கொலை வழக்கில் ஜாமின்; தலைமறைவு ஆசாமி கைது
ADDED : ஜன 09, 2024 12:44 AM

திருப்பூர்;பனியன் நிறுவன உரிமையாளரை கொன்றுவிட்டு, சூரத்தில் தலைமறைவாக இருந்த தொழிலாளியை, ஊத்துக்குளி போலீசார் நேற்று கைது செய்தனர்.
தேனி, பெரியகுளம் தாலுகா இ.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராம்தாஸ் மகன் கஜேந்திரன். திருப்பூரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், உடன் வேலை பார்க்கும் மணிகண்டனுடன் சேர்ந்து, நிறுவன உரிமையாளர் முகமது இப்ராஹிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி, நஞ்சராயன் குளத்துக்கு வரவழைத்து, முகமது இப்ராஹிமிக்கு, அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்துள்ளனர். மதுபோதையில் இருந்த போது, மொபைல் போனை பறித்து கொண்டு முகமது இப்ராஹிமை கொலை செய்து தப்பினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜாமினில் வெளி வந்த இருவரில், கஜேந்திரன் ஐந்தாண்டாக தலைமறைவானார். தொடர் விசாரணையில், குஜராத் மாநிலம் சூரத்தில் தலைமறைவாக இருந்த அவரை, எஸ்.ஐ., பாலமுருகன், சரவணன் மற்றும் போலீசார், கைது செய்து அழைத்து வந்து, முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.