sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஜப்பான் 'கான்கோ' நிறுவனத்தினர் திருப்பூருக்கு ஆர்டர் தர அழைப்பு

/

 ஜப்பான் 'கான்கோ' நிறுவனத்தினர் திருப்பூருக்கு ஆர்டர் தர அழைப்பு

 ஜப்பான் 'கான்கோ' நிறுவனத்தினர் திருப்பூருக்கு ஆர்டர் தர அழைப்பு

 ஜப்பான் 'கான்கோ' நிறுவனத்தினர் திருப்பூருக்கு ஆர்டர் தர அழைப்பு


UPDATED : பிப் 15, 2026 08:31 AM

ADDED : பிப் 15, 2026 06:22 AM

Google News

UPDATED : பிப் 15, 2026 08:31 AM ADDED : பிப் 15, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜப்பானில் உள்ள, பள்ளி சீருடை உற்பத்தி அமைப்பான, 'கான்கோ', 1854ல் தோற்றுவிக்கப்பட்டது. உலகளாவிய வினியோக சங்கிலி விரிவாக்க யுத்தியின் ஒரு பகுதியாக, திருப்பூரின் நீண்டகால கூட்டாண்மையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கான்கோ' நிறுவனத்தின் நிர்வாகிகள் குழு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை நேற்று சந்தித்தது.

ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிர மணியன் பேசியதாவது:

இந்தியாவின் சிறந்த உற்பத்தி நகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. கடின உழைப்பு மற்றும் நம்பகமான பணியாளர்களுடன் பெயர் பெற்று விளங்குகிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, பருத்தி நுாலிழை சார்ந்து இயங்குகிறது.

தற்போது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. திருப்பூரில் இருந்து, 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடக்கிறது. இத்துடன், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, உள்நாட்டு உற்பத்தியும் நடக்கிறது. திருப்பூர் கிளஸ்டரின் வலுவான உற்பத்தி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை நிரூபிக்கிறது.

இந்தியா - ஜப்பான் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு சாதகமான கட்டமைப்பை வழங்குகிறது. ஜப்பானிய சந்தையில் வர்த்தகம் செய்ய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

சரியான உற்பத்தி பங்குதாரர்களை அடையாளம் காண்பதன் மூலம் இருநாடுகளிடையே நிலையான வணிக உறவை வளர்க்க, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ந்து பாடுபடும்.

துாத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் அருகே இருப்பதால், திருப்பூர் 'கிளஸ்டர் 'பயன்பெறுகிறது. 'கான்கோ' நிறுவனம், ஆரம்பநிலை சரிபார்ப்புக்காக, குறைவான மதிப்பீட்டிலான சிறிய ஆர்டர்களை திருப்பூருக்கு வழங்கி, வர்த்தகத்தை தொடரலாம். திருப்தியை உறுதி செய்த பின், வர்த்தகத்தை அங்கீகரிக்கலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக, 'கான்கோ' பிரதிநிதிகள், கே.எம்., நிட்வேர், 'டெக்னோ ஸ்போர்ட்ஸ் வேர்' நிறுவனங்களில், உற்பத்தி பணிகளை பார்வையிட்டனர். கூட்டத்தில் பொது செயலாளர் திருக்குமரன், நிர்வாகக் குழு உறுப்பினர்சுனில் குமார் ஜுன்ஜுன்வாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us