/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூ விலை குறைவு
/
வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூ விலை குறைவு
ADDED : மே 30, 2025 01:21 AM
திருப்பூர்; வைகாசி மாதம், வளர்பிறை நாட்களாக இருந்த போது பூக்களுக்கு விலை இல்லாத சூழல் உள்ளது. வழக்கமாக இக்கால கட்டத்தில் உயர்ந்திருக்கும் பூக்கள் விலை, வரத்து அதிகரிப்பால், குறைந்திருப்பதால், பூ வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
மாசி, பங்குனி மாதம் முகூர்த்த தினங்களில் உயரும் மல்லிகை பூ விலை, சித்திரையில் திருமணம், சுபநிகழ்ச்சிகள் குறைவு என்பதால் சற்று குறையும்; மீண்டும் வைகாசி மாதம் உயரும். நடப்பாண்டு பங்குனி துவங்கும் முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சித்திரை மாதத்தில் அதிகபட்சமாக, 108 பாரன்ஹூட் வரை வெப்பம் பதிவாகியது.
திருப்பூருக்கு பூக்கள் வரத்துள்ள பகுதிகளாக உள்ள திண்டுக்கல், சத்தியமங்கலம் (ஈரோடு) பகுதியிலும், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனால், மல்லிகை பூ வரத்து, 2.10 டன்னாக உயர்ந்து, மல்லிகை கிலோ, 280 ரூபாய்க்கும், 250 கிராம், 60 முதல், 80 ரூபாய்க்கு விற்றது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால், பூக்கள் வரத்து குறைந்தது. இருப்பினும், விற்பனை இல்லாததால், பூக்கள் விலை எதிர்பார்த்த அளவு உயரவில்லை.
கடந்த, 28ம் தேதி வைகாசி முகூர்த்தம் என்பதால், பூ விலை உயருமென பூ வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு கிலோ மல்லிகை பூ, 650 - 550 ரூபாய், 250 கிராம், 120 முதல், 150 ரூபாயாக இருந்தது. நேற்று, 1.80 டன் பூ வரத்தால் விலை குறைந்து, மல்லிகை பூ கிலோ, 400 ரூபாய், முல்லை பூ கிலோ, 200 ரூபாய்க்கும், 250 கிராம் மல்லிகை பூ, 100 ரூபாய், முல்லை பூ, 50 ரூபாய்க்கும் விற்றது.