ADDED : ஜன 25, 2026 06:37 AM
திருப்பூர்: நடப்பு வாரத்தில் பூக்களின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால், விலை மெல்ல குறைய துவங்கியுள்ளது. வரும் நாட்களில் வரத்து அதிகமானால், பூ விலை இன்னமும் குறையுமென வியாபாரிகள் தெரிவித்தனர்.
பனியின் தாக்கம், பூ வரத்து குறைவால், பொங்கல் பண்டிகை வாரத்தில் பூக்களின் விலை திருப்பூரில் உயர்ந்திருந்தது. கிலோ, 5,000 ரூபாய், 250 கிராம், 1,500 ரூபாய் வரை விற்றது.
இரு நாட்களாக மல்லிகை பூ வரத்து மெல்ல அதிகரித்துள்ளது. 200 - 300 கிலோவாக இருந்த வரத்து, 500 - 700 கிலோவாகியுள்ளது. வரத்து உயர்ந்துள்ள நிலையில், பூக்களை வாங்க நேற்று வாடிக்கையாளர் குறைவாக வந்ததால், 250 கிராம், 750 ரூபாய், கிலோ, 3,000 ரூபாய்க்கு ஒரு கிலோ மல்லிகை பூ விற்றது.
'பனி சற்று குறைந்து, மதிய வேளையில் வெயில் நன்றாக பதிவாகி வருகிறது. மல்லிகை பூ வரத்து இயல்புக்கு திரும்புமென எதிர்பார்க்கிறோம். வரும் நாட்களில் வரத்து மேலும் அதிகரித்தால், பூ விலை குறைய வாய்ப்புள்ளது,' என, பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
