/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியால் வரத்து குறைவு; மல்லிகை கிலோ ரூ.2,000
/
பனியால் வரத்து குறைவு; மல்லிகை கிலோ ரூ.2,000
ADDED : டிச 19, 2025 06:23 AM

பத்து நாட்களாக பனிப்பொழிவு தொடர்வதால், மார்க்கெட்டுக்கான பூ வரத்து பாதிக்கப்பட்டுள்ளது; பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
சத்தியமங்கலம், திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து, திருப்பூருக்கு, 2.5 டன் பூக்கள் தினசரி விற்பனைக்கு வரும்.
இரவு துவங்கி, மறுநாள் அதிகாலை வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த பத்து நாட்களாக இதே நிலை தொடர்வதால், திருப்பூருக்கான பூ வரத்து சரிந்துள்ளது.
ஒன்று முதல், 1.50 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால், மல்லிகை பூக்கள் குறைந்த அளவிலான வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து பாதியாக குறைந்துள்ள நிலையில், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேற்று மல்லிகை பூ 250 கிராம், 500 ரூபாய்; கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்றது. முல்லை 250 கிராம், 300 ரூபாய்; கிலோ, 1,200 ரூபாய். அதே நேரம், பனி ஈரப்பதம் காரணம் இருப்பு வைக்க முடியாததால், செவ்வந்தி பூக்கள் அதிகளவில் குவிகின்றன.
ஒரு கிலோ, 250 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி விலை குறைந்து, கிலோ, 150 ரூபாய்க்கும், 250 கிராம், 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, மார்கழி முதல் வெள்ளிக்கிழமை மல்லிகை பூக்களை வாங்க வந்தவர்கள் பூ வரத்து குறைவு, விலை உயர்வால் ஏமாற்றம் அடைந்தனர்.

