நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோடு, சாலையப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தளபதி, 33. இவரும், இவரின் மனைவி இருவரும் தனியார் நிதி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டுக்கு உறவினர்கள் வந்ததால், அவர்களுடன் தளபதியின் தாயார் புறப்பட்டு சென்றார். இதனை பயன்படுத்தி பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்று சவரன், ரொக்கம் ஆகியன திருடப்பட்டது தெரிந்தது.
இதனை தொடர்ந்து, அவிநாசி போலீசில், தளபதி புகார் அளித்தார். அதன் பேரில், திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில், குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.