/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகை, பணம் திருட்டு; 4 தனிப்படை அமைப்பு
/
நகை, பணம் திருட்டு; 4 தனிப்படை அமைப்பு
ADDED : ஏப் 22, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; காங்கயம், நத்தக்காடையூர், வேலவன் நகரை சேர்ந்தவர் தங்கராஜ், 47. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு ஈரோடு சென்ற நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 17 சவரன் நகை, 1.20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றனர். நத்தக்காடையூர் போலீஸ் செக்போஸ்ட் அருகே பகல் நேரத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எஸ்.பி., உத்தரவின் பேரில், காங்கயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ., அடங்கிய, நான்கு தனிப்படை அமைத்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரிக்கின்றனர். அதில், கரூர், திண்டுக்கல், திருச்சி பகுதியில் விசாரிக்கின்றனர்.