/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளில் நகை திருட்டு; அடுத்தடுத்து துணிகரம்
/
வீடுகளில் நகை திருட்டு; அடுத்தடுத்து துணிகரம்
ADDED : பிப் 13, 2025 07:12 AM
பொங்கலுார்; பல்லடம் அடுத்த எலவந்தியை சேர்ந்தவர் சந்திரகுமார், 45; தனியார் நிறுவன ஊழியர். வேலை முடிந்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு, நான்கு சவரன் நகை மாயமாகியிருந்தது.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த், 30 தனியார் நிறுவன ஊழியர். குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை மாயமாகியிருந்தது.
காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தாராபுரத்திலும்...
தாராபுரம், வினோபா நகரை சேர்ந்தவர் மோகன்குமார், 54; விவசாயி. வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் பட்டப்பகலில் இவரது வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, இரு சவரன் நகை, 75 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர்.
தாராபுரம், நாரணாபுரத்தை சேர்ந்த விவசாயி வெங்கடாச்சலம், 63; இவரது வீட்டு பூட்டையும் உடைத்து பீரோவில் இருந்த, இரண்டு சவரன் நகை, 27 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.