நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், குன்னத்துார், செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், 56. இவரது வீட்டுக்குள் நுழைந்த பெரம்பலுாரை சேர்ந்த வெங்கடேஷ், 25 என்பவர், 6.5 சவரன் நகையை திருடி சென்றார்.
புகாரின் பேரில் குன்னத் துார் போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதானார்.