/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நந்தா பொறியியல் கல்லுாரியில்வேலை வாய்ப்பு தினம்
/
நந்தா பொறியியல் கல்லுாரியில்வேலை வாய்ப்பு தினம்
ADDED : மே 04, 2025 12:40 AM

திருப்பூர்: ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், நடப்பு கல்வியாண்டில், பல்வேறு பன் னாட்டு மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்களின் வாயிலாக, வேலை வாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு பணிநியமன ஆணை வழங்கி, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் 'வேலை வாய்ப்பு தினம்' கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ரகுபதி, வரவேற் றார். கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி, குத்துவிளக்கேற்றினார்.
கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து பேசுகையில், ''டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டேட்டா பார்டன், விப்ரோ, கார்ட்ராபிட், ஜாஸ்மின் இன்போ டெக் உள்ளிட்ட, 139க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகை புரிவதற்கு வழிவகை செய்து, அதன் வாயிலாக, 2,125 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்,'' என்றார்
கோவையில் செயல்படும் கார்ட்ராபிட் மென்பொருள் நிறுவன தலைவர் ரமேஷ் சுப்ரமணியன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பணி நியமன உறுதி சான்றிதழை வழங்கி பேசினார். கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், தொழில்நுட்ப வளாக நிர்வாக அதிகாரி வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.