ADDED : மார் 14, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (15ம் தேதி) நடைபெறுகிறது.
காலை, 10:30 மணிக்கு துவங்கும் முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளரை தேர்வு செய்கின்றன. வேலை தேடுவோர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய விவரங்களுடன் முகாமில் பங்கேற்கவேண்டும்.
வேலை தேடுவோரும், வேலை அளிப்பவர்களும், https://www.tnprivatejobs.gov.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். விபரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

