தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மூலப்பொருள் விலை குறைய வேண்டும்: 'ஜாப் ஒர்க்' நிறுவனத்தினர் எதிர்பார்ப்பு

மூலப்பொருள் விலை குறைய வேண்டும்: 'ஜாப் ஒர்க்' நிறுவனத்தினர் எதிர்பார்ப்பு

மூலப்பொருள் விலை குறைய வேண்டும்: 'ஜாப் ஒர்க்' நிறுவனத்தினர் எதிர்பார்ப்பு


UPDATED : ஜூன் 02, 2026 11:30 PM

ADDED : ஜூன் 02, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2026 11:30 PM ADDED : ஜூன் 02, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க 'டேரிப்' பிரச்னை தீர்ந்த பின், புதிய ஆர்டர்களை பெற்று, மீண்டும் ஏற்றுமதியை மேம்படுத்தலாம் என்று தயாரான போது, இஸ்ரேல் - ஈரான் போர் துவங்கியது. பின்னலாடை தொழிலின், ஜாப் ஒர்க் நிறுவனங்களின் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. முதலில் எலாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் பாலியஸ்டர் நுால் விலை உயர்ந்தது.

சாயக்கூலி, பிரின்டிங் கட்டணம் உயர்த்தப்பட்டது. பல்வேறு வகையான மூலப்பொருட்கள் விலை உயர்வால், ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தியில், செலவு அதிகரித்தது. இக்கட்டான இந்நிலையில்தான், நுால் விலையும் திடீரென உயர்ந்தது. திருப்பூரில் அதிகம் பயன்படுத்தும் ஒசைரி நுால்விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்தது. பஞ்சு விலை உயர்வால் நுால் விலை உயர்ந்துவிட்டதாக, நுாற்பாலைகளும் தெரிவித்தன. பஞ்சு விலை காரணமில்லாமல் உயர்ந்தால் தொழில் நடத்த முடியாதன தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நுால்விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது. இதனால், நுால்விலையில், 10 ரூபாய் குறைந்தது. பஞ்சு விலை குறையும்பட்சத்தில், நுால்விலையை மேலும் குறைக்க, நுாற்பாலைகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

உதவிக்கு எதிர்பார்ப்பு

---------------

காந்திராஜன் படம் வைக்கணும்

இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:

கெமிக்கல் மற்றும் சாயங்களின் விலை உயர்வை விளக்கிய போது, மத்திய அரசு, இறக்குமதி வரியில் விலக்கு அளித்தது. இருப்பினும், கெமிக்கல் மற்றும் சாயம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சு விலையை குறைக்க வேண்டுமெ, கூட்டுக்குழுவில் சென்ற, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சார்பிலும் வலியுறுத்தினோம். அதனால், பஞ்சு விலை, கேண்டிக்கு, 2,500 ரூபாய் குறைந்துள்ளது.

அதனை தொடர்ந்து, நுால் விலையும், கிலோவுக்கு, 10 ரூபாய் குறைந்துள்ளது. அதிகம் பயன்படுத்தும், 30 ம்நம்பர் நுால்விலல 298 ரூபாய் முதல், 310 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை குறையும் போது, நுால் விலையையும் குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பின்னலாடை தொழிலில், அனைத்து வகையான விலை மற்றும் கட்டண உயர்வுகளையும் குறைக்க, தகுந்த உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us