/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
/
ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 08, 2025 03:58 AM
திருப்பூர்: 'ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, திருப்பூர் வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும்' என்ற கோரிக்கை, ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமும் காலை, 6:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. காவிரி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, டேனிஷ்பேட்டை, பொம்மிடி, மொரப்பூர், சாமல்பட்டி, திருப்பத்துார் உட்பட பெரும்பாலான ஸ்டேஷன்களை கடந்து இந்த ரயில் செல்கிறது. காலை, 6:00 மணிக்கு துவங்கும் பயணம், 11:50 மணிக்கு நிறைவு பெறுகிறது.
மறுமார்க்கமாக, மதியம், 3:10 மணிக்கு ஜோலார்பேட்டையில் புறப்படும் ரயில் (எண்:06411) இரவு, 8:00 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது. தினசரி இயங்கும் இந்த ரயிலில், ஈரோடு, சேலம் மாவட்ட பயணிகள் எளிதில் சென்று வர முடிகிறது. இந்த ரயிலை திருப்பூர் மற்றும் கோவை வரை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
ஏன் அவசியம் ?
ஈரோட்டில் இருந்து திருப்பூர் மற்றும் கோவை செல்ல மாலை, 5:10 மணிக்கு நாகர்கோவில் - கோவை ரயில் உள்ளது. இதன்பின், மாலை, 6:40 மணிக்கு ஈரோடு வரும் சென்னை - கோவை வந்தே பாரத்; இரவு, 7:00 மணிக்கு ஈரோடு வரும், பெங்களூரு - கோவை உதய் ரயில்; இரவு 7:25 மணிக்கு வரும் மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி ஆகிய மூன்று ரயில்களும் முன்பதிவு பெட்டிகளை மட்டுமே கொண்ட ரயில்கள்; இவற்றில் சாதாரண, முன்பதிவில்லா டிக்கெட் பெறும் பயணிகள் அவசர பயணத்துக்க கூட ஏற முடியாத நிலையுள்ளது.
ஜோலார்பேட்டை ரயில், ஈரோட்டுக்கு இரவு, 8:00 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயிலை அப்படியே திருப்பூர், கோவை வரை நீட்டித்தால், தினசரி ஈரோடு, திருப்பூர், கோவை செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில், கோவையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு செல்லும் போது, பொம்மிடி, திருப்பத்துார், சாமல்பேட்டை செல்லும் ரயில் பயணிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.