sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயணங்கள் முடிவதில்லை... பந்தய களம் அல்ல சாலை!

/

பயணங்கள் முடிவதில்லை... பந்தய களம் அல்ல சாலை!

பயணங்கள் முடிவதில்லை... பந்தய களம் அல்ல சாலை!

பயணங்கள் முடிவதில்லை... பந்தய களம் அல்ல சாலை!


ADDED : பிப் 18, 2024 01:55 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சாலை விதிகளை யார் யார் மீறினாலும் அவர்கள்

பாதுகாப்பது காண்பது அரிது'

'ஒழுக்கம் பொறுமை சகிப்புத்தன்மை எதிர்பார்ப்பு

ஐந்தின் வகைதெரிவாரே சிறந்த ஓட்டுனர்'

'சாலையில் மிதமான வேகத்தில் வாகன பயணம்

சிறப்பான வாழ்க்கை பயணம்'

இவை திருக்குறள் போல இருந்தாலும் கூட, சாலை பாதுகாப்பு குறித்த, போக்குவரத்து கழகத்தின் குரல் என்றே சொல்ல லாம்.

மக்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கும் வகையில், புரியக்கூடிய வார்த்தைகளால், நவீன திருக்குறளை, அந்த வாகனத்தின் முகப்பில் அச்சிட்டு வைத்திருந்தது பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றது.

அரசு போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா நடந்தது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் சாலை பாதுகாப்பு, விபத்தில்லா பயணம் குறித்த விழிப்புணர்வு வாகனம் வரவழைக்கப்பட்டது.

''ஓட்டுனரின் துாக்கம், குடும்பத்தினருக்கு துக்கம். சாலையில் பொறுப்புடன் ஓட்டினால், சிறப்புடன் வாழலாம். நமக்கு அன்பானவர்கள் நம்மை எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பர்.

உறவுகளுக்கு உயிர் அவசியம்; உனக்கு ஏன் இவ்வளவு அவசரம். நம் குழந்தைகள் பாதுகாப்பு நாம் தான் பொறுப்பு''

''சாலையில் வாகனம் இயக்கும் முன் எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னம் என்ன, அதனை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப வாகனத்தை இயக்க வேண்டும்''

''கவனச்சிதறலுடன் சாலைகளை கடக்க முயலாதீர். ஒருவரை ஒருவர் சண்டையிட்டு ஓடிபிடித்து விளையாட பந்தய களம் அல்ல சாலை'' என்பது போன்ற பல விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதுதவிர, மோட்டார் வாகன சட்டம் 1980ன் படி, டிரைவர், நடத்துனர் லைசன்ஸ் பெறுவதற்கான வழிமுறை, அதற்கான ஆவணங்கள், திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக வழங்கப்படும், கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி குறித்து விளக்கப்பட்டிருந்தது.

விழிப்புணர்வு வாகனத்தின் நிறைவு பகுதியில், 'ஒவ்வொரு பயணத்தையும் திட்டமிடுங்கள். பயண நேரத்துக்கு முன்கூட்டியே புறப்படுங்கள். சாலையில் அவசரமும், பதட்டமும் தவிர்த்திடுங்கள்,' என எழுதப்பட்டிருந்தது.

ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால், விபத்தில் சிக்கி எப்படி காயமடைகிறோம் என்பது குறித்து, 'டெடிபியர்' மொம்மையை கொண்டு, பயணிகளுக்கு புரியும் வகையில் விளக்கப்பட்டது. மத்திய பஸ் ஸ்டாண்டில் நாள் முழுதும் நின்ற வாகனத்தை பயணிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.






      Dinamalar
      Follow us