/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜூனியர் குப்பண்ணா அவிநாசியில் புதிய கிளை
/
ஜூனியர் குப்பண்ணா அவிநாசியில் புதிய கிளை
ADDED : ஜன 05, 2024 01:34 AM

திருப்பூர்;அவிநாசியில், சேலம் - கோவை பைபாஸ் ரோட்டில் வேலாயுதம்பாளையத்தில் தலைசிறந்த அசைவ உணவகமான ஜூனியர் குப்பண்ணா திறப்பு விழா நடந்தது.
யமுனா ஹைபவர் போர்வெல்ஸ் உரிமையாளர் சண்முகம், கே.கே.நிட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தனர். அவிநாசி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஜூனியர் குப்பண்ணா நிர்வாகிகள் கூறியதாவது:
அவிநாசி, திருப்பூர் மக்களின் நீண்ட நாள் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஜூனியர் குப்பண்ணா இன்று முதல் செயல்பட உள்ளது. அனைத்து வகையான அசைவ உணவுகளும் தரமாகவும், சுவையாகவும் வழங்குகிறோம். குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும், பல்வேறு வகை அசைவ உணவுகள் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.