/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜூனியர் கபடி போட்டி; மாவட்ட அணி தேர்வு
/
ஜூனியர் கபடி போட்டி; மாவட்ட அணி தேர்வு
ADDED : அக் 27, 2025 11:09 PM
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் அறிக்கை:
திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில், மாவட்ட ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி அடுத்த மாதம், 2ம் தேதி காலை 9:00 மணிக்கு மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், 18ம் தேதி ஜன. 2006ம் ஆண்டுக்கு பின் பிறந்திருக்க வேண்டும். 70 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் திருப்பூர் மாவட்ட சிறுவர்கள் அணி அடுத்த மாதம், 7 முதல் 9ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் நடைபெறும், 51வது மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டிக்கு மாவட்ட கபடி கழகம் சார்பில், அழைத்து செல்லப்படுவர். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, 20 ஆயிரம், 2ம் பரிசாக, 15 ஆயிரம், 3ம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்று இடங்களுக்கு கோப்பையும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

