/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளிக்குகபடி கழகம் உதவி
/
மாநகராட்சி பள்ளிக்குகபடி கழகம் உதவி
ADDED : டிச 18, 2024 05:44 AM

திருப்பூர், : திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், மாநகராட்சி பள்ளிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
திருப்பூர், கொங்கு நகர், சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்திற்காக, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதையேற்று, திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், பள்ளி தலைமையாசிரியையிடம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
தொகையை, மாவட்ட கபடி கழக கவுரவ தலைவர் நாச்சிமுத்து, செய்தி தொடர்பாளர் சிவபாலன், நிர்வாகிகள் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர்.நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், பள்ளி தலைமையாசிரியர் சுந்தர்ராஜ், உதவி தலைமையாசிரியைகள் சாந்தாமணி, பவுலின் ராணி, உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.