ADDED : நவ 06, 2024 02:59 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்; காடவர் கோன் நாயனார் குருபூஜை நேற்று நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார் குருபூஜை நடந்து வருகிறது. அவ்வகையில், ஐப்பசி மாத மூல நட்சத்திர நாளாகிய நேற்று, ஐயடிகள் காடவர் கோன் நாயனார் குருபூஜை நடந்தது. கல்மண்டபத்தில் உள்ள திருமேனிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டத்தினர், சிவனடியார்கள் பங்கேற்றனர். திருத்தொண்டத்தொகை, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறை ஆகியவற்றை பாராயணம் செய்த வழிபட்டனர்.
