/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலைமகள் மடியில் கலைமகள் கோவில்
/
மலைமகள் மடியில் கலைமகள் கோவில்
ADDED : டிச 07, 2025 07:12 AM
திருப்பூர்: மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில், 'சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி' செயல்படுகிறது.
கோவை ரூட்ஸ் குழும தலைவர் ராமசாமி, நிர்வாக அறங்காவலர்; அதன் மனிதவளத் துறை இயக்குநர் கவிதாசன் இதன் செயலர். மேலும், முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் கார்த்திகேயன், எஸ்.கே.எம். நிறுவனர் மயிலானந்தம், முன்னாள் கலெக்டர் விஜயகுமார், முன்னாள் தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் ஆகியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகவும் இப்பள்ளியை செயல் படுத்தி வருகின்றனர்.
பள்ளி செயல்பாடுகள் குறித்து, பள்ளி முதல்வர், உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலாகிரேஸ் ஆகியோர் கூறியதாவது:
நமது கலாசாரம், வாழ்க்கை விழுமியங்களைப் போற்றுதல் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்த்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தரமான உயர்தரக் கல்வி, ஒழுக்கம் மற்றும் நவீன வசதியுடன் உறைவிட வாழ்க்கையை இங்கு பெறுகின்றனர்.
தினமும் யோகா, தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்கள் வாயிலாக, மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தேசிய அளவிலான போட்டிகள் வரை சாதிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

