/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., பள்ளியில் 'கல்வி உற்சவம்'
/
ஏ.வி.பி., பள்ளியில் 'கல்வி உற்சவம்'
ADDED : அக் 26, 2024 11:08 PM

திருப்பூர்: திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் கல்விக்கண்காட்சி, 'கல்வி உற்சவம் - 2025' என்ற பெயரில் நடந்தது.
மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை படிக்கும் 1560க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடங்களில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரத்துக்கும் அதிகமான தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி செயல்விளக்கம் அளித்தனர்.
ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் கிருஷ்ணாமூர்த்தி, திருப்பூர் அறிவியல் மன்ற நிர்வாகி ஈஸ்வரன், ஏ..வி.பி., கல்லுாரி முதல்வர் கதிரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர் படைப்புகளை பாராட்டினர்.