/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருளின் பிடியில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்
/
இருளின் பிடியில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்
இருளின் பிடியில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்
இருளின் பிடியில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : பிப் 18, 2024 01:54 AM

பல்லடம்:பல்லடம் உட்கோட்ட காவல் எல்லையின் கீழ் உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ளது.
சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள், இட தகராறு, குடும்ப பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் புகார்களுக்காக, பொதுமக்கள் காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை நாடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் உள்ள முகப்பு விளக்கு எரியாததால், இரவு நேரங்களில் ஸ்டேஷன் இருளில் மூழ்கியுள்ளது.
இதனால், புதிதாக புகார் அளிக்க வரும் பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முகப்பு விளக்கை எரிய வைத்து, போலீஸ் ஸ்டேஷன் இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.