/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலையில் 22ல் கந்த சஷ்டி துவக்கம்
/
சிவன்மலையில் 22ல் கந்த சஷ்டி துவக்கம்
ADDED : அக் 19, 2025 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 22ம் தேதி துவங்குகிறது.
அன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பூஜைகள் செய்து, சுவாமி சப்பரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து, மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சுவாமி கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். பின், பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்குகின்றனர். அன்றாடம் காலை, 10:00 மணி மற்றும் மாலை, 4:30 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடக்கிறது.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா, 27ம் தேதி இரவு நடைபெற உள்ளது. 28ம் தேதி முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.