/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் முதலாண்டு மாணவருக்கு வரவேற்பு
/
காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் முதலாண்டு மாணவருக்கு வரவேற்பு
காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் முதலாண்டு மாணவருக்கு வரவேற்பு
காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் முதலாண்டு மாணவருக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 02, 2025 11:54 PM

திருப்பூர்; காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நேற்று நடந்தது. காங்கயம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி மகேந்திர கவுடா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுரேஷ் வரவேற்றார்.
கோவை பாரதியார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலன், சென்னை வி.ஐ.டி., பல்கலை மாணவர் நலத்துறையின் முன்னாள் இயக்குநர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்களுக்கு எதிர்காலத்துக்கு வழிகாட்டும் தன்னம்பிக்கை கருத்துகளை பேசினர்.
காங்கயம் கல்வி குழுமத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாச்சலம், தாளாளர் ஆனந்த வடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் ராம்குமார், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சைன்ஸ் - ரிசேர்ச் கல்லுாரி முதல்வர் ஜெயராமன், பணியமர்வுத் துறையின் இயக்குநர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பி.காம்., சி.ஏ., துறைத்தலைவர் சிவசெல்வி நன்றி கூறினார்.