தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கன்னட தேவாங்க செட்டியார் அறக்கட்டளை செயற்குழு

 கன்னட தேவாங்க செட்டியார் அறக்கட்டளை செயற்குழு

 கன்னட தேவாங்க செட்டியார் அறக்கட்டளை செயற்குழு


ADDED : ஜன 28, 2026 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 08:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம்: அனைத்திந்திய திருப்பூர் மண்டல தேவாங்க ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி மன்றம், கன்னட தேவாங்க செட்டியார் சமூக அறக்கட்டளை இணைந்து நடத்திய செயற்குழு கூட்டம் குமரானந்தபுரம் கஸ்துாரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அறக்கட்டளை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். நற்பணி மன்ற தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை இணை செயலாளர் யோகநாதன் வரவேற்றார். நற்பணி மன்ற மாநில பொருளாளர் வீரபத்திரர் சிறப்புரையாற்றினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில், டவுன்ஹாலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கிற்கு, எஸ்.ஆர்.சி.ரங்கசாமி செட்டியார் என்று பெயர் வைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மேயரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மாநில அமைப்பு செயலாளர் ரவிக்குமார்,நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us