/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாற்றாண்டு விழாவுக்கு தயாராகிறது கணக்கம்பாளையம் அரசு பள்ளி
/
நுாற்றாண்டு விழாவுக்கு தயாராகிறது கணக்கம்பாளையம் அரசு பள்ளி
நுாற்றாண்டு விழாவுக்கு தயாராகிறது கணக்கம்பாளையம் அரசு பள்ளி
நுாற்றாண்டு விழாவுக்கு தயாராகிறது கணக்கம்பாளையம் அரசு பள்ளி
ADDED : மார் 16, 2025 12:08 AM
திருப்பூர்: கணக்கம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, நுாற்றாண்டு விழா கொண்டாட தயாராகி வருகிறது.
பள்ளி துவங்கி, 100 ஆண்டு கண்ட பள்ளிகளை கண்டறிந்து, முன்னாள் மாணவர்களை அழைத்து, நுாற்றாண்டு விழா கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அவ்வகையில், பெருமாநல்லுார் அருகேயுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், வரும், 23ம் தேதி நுாற்றாண்டு விழா கொண்டாட மாவட்ட தொடக்க கல்வித்துறை தயாராகி வருகிறது.
கடந்த, 1924ம் ஆண்டில் திண்ணை பள்ளியாக துவங்கப்பட்ட இப்பள்ளியில், 15 மாணவர்களே படித்துள்ளனர். கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு, 1960ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. படித்து முடித்து, பணியில் உள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வசிக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து, நுாற்றாண்டு விழா நினைவாக, பள்ளி முகப்பில் நுழைவுவாயில் ஒன்றை கட்டும் பணியை துவக்கியுள்ளனர். நுாற்றாண்டு விழா நாளில் இதுவரை பள்ளியில் பணியாற்றி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களையும் கவுரவிக்க உள்ளனர்.
தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வரும், ஏப்., மாதம் இறுதியாண்டு தேர்வுகள் நடக்கிறது. கல்வியாண்டு நிறைவு பெற ஒன்றரை மாதம் மட்டுமே இருப்பதால், ஆண்டு விழா நிகழ்ச்சிகளை பள்ளிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.