/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கர்நாடகா மக்காச்சோளம் கொள்முதலில் ஆர்வம்
/
கர்நாடகா மக்காச்சோளம் கொள்முதலில் ஆர்வம்
ADDED : நவ 03, 2024 11:17 PM

பொங்கலுார்; கோழி மற்றும் மாட்டு தீவனங்களுக்கான முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் திகழ்கிறது. திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கோழி பண்ணைகள் அதிக அளவில் செயல்படுகின்றன.
இவற்றிற்கு அதிக அளவில் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. எத்தனால் உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதால் மக்காச்சோளத் தேவை அதிகரித்துள்ளது.
கோடைக்காலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டதால் உள்ளூரில் சாகுபடி பரப்பு குறைந்ததை அடுத்து மக்காச்சோளம் வரத்து குறைந்துள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க வியாபாரிகள் கர்நாடகாவில் இருந்து மக்காச்சோளம் கொள் முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கர்நாடக பகுதிகளில் மழை பெய்வதால் அதிக ஈரப்பதத்துடன் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் அதை தமிழகத்திற்கு கொண்டு வந்து உலர்களங்களில் காய வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது கிலோ, 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம் அறுவடைக்கு வர இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். உள்ளூர் வரத்து அதிகரித்தால் விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது.