/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருணாநிதி நுாலகம்: உதயநிதி திறந்தார்
/
கருணாநிதி நுாலகம்: உதயநிதி திறந்தார்
ADDED : டிச 20, 2024 03:47 AM

திருப்பூர்; பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று திருப்பூர் வந்த துணை முதல்வர் உதயநிதிக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூரில் நேற்று நடைபெற்ற அரசு துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி, கோவையிலிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் வந்தார். அவிநாசி ரோடு வழியாக காரில் வந்த அவரை பல்வேறு பகுதிகளிலும் ரோட்டில் திரண்டிருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். காரில் நின்றபடி பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தும், கைகளை குலுக்கியும் அவர் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள அண்ணாதுரை சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாளான நேற்று அன்பழகன் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்துாவி, உதயநிதி மரியாதை செலுத்தினார். அங்கு கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஏ.பி.டி., ரோடு சூர்யா நகரில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு முன்னிட்டு அமைக்கப்பட்ட நுாலகத்தை உதயநிதி திறந்து வைத்தார். தொகுதிவாரியாக கருணாநிதி நினைவு நுாலகம் அமைக்கும் விதமாக இந்நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நுாலகம் முன்புறம் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை உதயநிதி ஏற்றி வைத்தார்.
தி.மு.க., இளைஞர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாமிநாதன் நுாலக கல்வெட்டைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி, மண்டல குழு தலைவர் பத்மநாபன், ஈரோடு எம்.பி., பிரகாஷ், வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி செயலாளர் திலக்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.