/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் சாதனையில் கதிரவன் மெட்ரிக் பள்ளி
/
தொடர் சாதனையில் கதிரவன் மெட்ரிக் பள்ளி
ADDED : மே 18, 2025 01:03 AM

திருப்பூர் : திருப்பூர், கே.வி.ஆர்., நகர் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடந்த, 65 ஆண்டுகளுக்கும் மேலாக, நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
கடந்த 2024 -25ம் கல்வியாண்டிலும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் கவின், 594 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளார். 591 மதிப்பெண்களுடன், ஆரோக்கியராஜ் இரண்டாமிடம்; 589 மதிப்பெண்களுடன் ரேவந்திஹா மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
கணிதம் - 1, வணிகவியல் - 3, கணக்குப்பதிவியல் - 1, கணினி அறிவியல் - 4, கணினி பயன்பாட்டியல் - 9 என மொத்தம், 18 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 76 மாணவர்களில், 44 பேர், 500 க்கு மேல்; 20 பேர், 550 க்கு மேல்; 6 பேர் 570 க்கு மேல்; 2 பேர் 590 க்கு மேல்மதிப்பெண் பெற்றுள்ளனர். இன்ஜி., கட் ஆப், 200 க்கு, 197 பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 495 மதிப்பெண்களுடன் மாணவி ஜனனிப்பிரியா முதலிடம்; 494 மதிப்பெண்களுடன் சரிகாதேவி இரண்டாமிடம்; 490 மதிப்பெண்களுடன் சிவசபரி மூன்றாமிடம் பிடித்துள்ளனர். தேர்வு எழுதிய 56 மாணவர்களில், 9 பேர், 475 க்கு மேல்; 20 பேர், 450 க்கு மேல்; 30 பேர், 425 க்கு மேல்; 36 பேர், 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி, செயலாளர் இந்திராணி, பொருளாளர் நிவேதா ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 425 க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 1 சேர்க்கைக்கான கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு, 92620 46040, 90251 26656 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.