ADDED : ஜன 04, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம், திருப்பூர் மாவட்டம் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின், 265வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில அவைத்தலைவர் மணி, பொது செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில துணை தலைவர் ரஞ்சித், மாவட்ட அவைத் தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், விஜயகுமார் மற்றும் அ.தி.மு.க., - ம.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொட்டராஜ், ரத்தினசாமி, பேச்சிமுத்து, ராேஜந்திரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.