ADDED : பிப் 10, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 ஆகியன சார்பில், தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம் கல்லுாரியில் நடந்தது. பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
மாநகராட்சி நகர் நல மைய டாக்டர் தீபக் பேசுகையில், ''குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சியின்மை ஏற்படுகிறது. பசியின்மை, வாந்தி, ரத்தசோகை போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. துாய்மை பேண வேண்டும்,'' என்றார். குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் முஸ்தாக், பொன்னையன், நகர்ப்புற செவிலியர்கள் ரூபி, சுபவர்த்தினி உட்பட பலர் பங்கேற்றனர்.

