ADDED : அக் 26, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு விசைத்தறி தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல ஆயத்தம் ஆகி வருகின்றனர்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், '' பண்டிகைக்கு முன் போனஸ் தொகை பட்டுவாடா நடக்கும். ஏறத்தாழ, 10 நாட்கள் வரை விசைத்தறிகள் இயக்கம் பெரிய அளவு இருக்காது,'' என்றார்.