/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.ஜி. நகரில் குடியிருக்க முடியல! சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
/
கே.ஜி. நகரில் குடியிருக்க முடியல! சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
கே.ஜி. நகரில் குடியிருக்க முடியல! சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
கே.ஜி. நகரில் குடியிருக்க முடியல! சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
ADDED : டிச 06, 2025 04:58 AM

உடுமலை: குடியிருப்பில் தேங்கியிருக்கும் கழிவு நீர், திறந்தவெளி குப்பைக்கிடங்கால், சுகாதார சீர்கேடு நிரந்தரமாகியும், பெரியகோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கே.ஜி., நகர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்டது கே.ஜி., நகர் குடியிருப்பு. நகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள இக்குடியிருப்பில், 400க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்கள், சமீபகாலமாக சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கின்றனர். வீடுகளின் முன் நீண்ட காலமாக கழிவு நீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகரித்து, பலர் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அருகிலுள்ள குடியிருப்பில் இருந்து நேரடியாக ரோட்டில், கழிவு நீர் வெளியேற்றப்படுவதே இப்பிரச்னைக்கு முக்கிய காரணம் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு கழிவு நீர் தேங்கியுள்ளதால், மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அதே போல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பை சேகரிப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டு பணிகள் எதுவும் மேற்கொள்வதில்லை. குடியிருப்பு ரோட்டையொட்டி, திறந்தவெளியில் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் நேரடியாக வீசப்படுகிறது.
நீண்ட காலமாக அகற்றப்படாமல், அவை சுகாதார சீர்கேட்டுக்கு முக்கிய காரணமாகியுள்ளது. பல முறை புகார் தெரிவித்தும், பெரியகோட்டை ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவித்தும் ஊராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை உள்ளது.
கழிவு நீரை வெளியேற்றவும், திறந்தவெளியில் குவிந்துள்ள குப்பையை அகற்றாவிட்டால், ஊராட்சி, ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்,' என்றனர்.

