/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கதர் சட்டை கருப்பு சட்டையானது காங்., கவுன்சிலரின் முடிவு
/
கதர் சட்டை கருப்பு சட்டையானது காங்., கவுன்சிலரின் முடிவு
கதர் சட்டை கருப்பு சட்டையானது காங்., கவுன்சிலரின் முடிவு
கதர் சட்டை கருப்பு சட்டையானது காங்., கவுன்சிலரின் முடிவு
ADDED : மார் 29, 2025 05:52 AM
திருப்பூர : திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்., கவுன்சிலர் செந்தில்குமார் கருப்பு சட்டை அணிந்து வந்து பங்கேற்றார்.
அவர் வழக்கமாக வெள்ளை நிறத்தில் கதர் சட்டை மற்றும் வேட்டி அணிந்து வருவார்.பட்ஜெட் கூட்டத்தில் அவர் பேசியதாவது:காமராஜர் ஆட்சிக்குப் பின், தற்போது தான் ஒரு உபரி பட்ஜெட்டை பார்க்க முடிகிறது.
தமிழகமே வியக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றால் வியப்பில்லை. இதனை தயாரிப்பதற்கான உழைப்பை முயற்சியை குறை கூற முடியாது.மேயர் உள்ளிட்ட குழுவினர் இதை திறம்பட தயாரித்துள்ளனர்.
பல்வேறு முக்கிய அம்சங்கள் பாராட்டுக்குரியதாக உள்ளது.நகரின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளுக்கு மாநாட்டு அரங்கில் அவர்கள் குறித்த விவரங்களுடன் சிலை அமைக்கும் திட்டம் சிறப்பானது. துாய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
மாநகராட்சியில் சொத்துவரி குறைப்புக்கு பல தரப்பும் கோரிக்கை விடுத்தும், இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு இல்லை. சொத்துவரி குறைக்கும் வரை மாநகராட்சி மன்றத்தில் எனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.