/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 தேர்ச்சியில் கிட்ஸ் கிளப் பள்ளி அசத்தல்
/
பிளஸ் 2 தேர்ச்சியில் கிட்ஸ் கிளப் பள்ளி அசத்தல்
ADDED : மே 13, 2025 12:48 AM

திருப்பூர், ; திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி பொது தேர்வில் அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடத்துடன், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.
திருப்பூர், செரீப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது. அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி பாத்திமா, 589 எடுத்து மாவட்ட அளவில் அசத்தி, பள்ளியில் முதலிடம் பிடித்தார். ரேஷ்மா, 587 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம், திவாசுந்தர், 586 பெற்று, மூன்றாமிடம் பெற்றார்.
மாணவியர் விகாஷினி, ஜெய்சுவேதா, ஹர்ஷிதா, திவ்யலட்சுமி, சுதாஸ்ரீ என, ஐந்து பேரும், தலா, 585 மதிப்பெண் பெற்று, நான்காமிடம் பிடித்தனர். 585 மதிப்பெண்களுக்கு மேல், ஒன்பது பேரும், 580க்கு மேல், 12 பேரும், 570க்கு மேல், 23 பேரும், 550 க்கு மேல், 45 மாணவர்களும் எடுத்துள்ளனர். பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ., சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு நடக்கிறது.
இதுதவிர பிரீ.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. அனைவரையும் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா, நிகில், சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.