ADDED : நவ 03, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் ; கேரள மாநிலம், பாலக்காடைச் சேர்ந்தவர் செல்வகுமார், 40; லாரி டிரைவர். இதே பகுதியை சேர்ந்தவர் சிஜூ, 40; கிளீனர்.
இரு தினங்கள் முன், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, லாரியில் விறகுகள் ஏற்றி வந்து, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, வடுகபாளையத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் டெலிவரி செய்தனர்.
அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே, இருவரும் மது அருந்தினர். செல்வகுமாருக்கும், சிஜூவுக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், குக்கர் மூடியால், செல்வகுமார் தாக்கியதில் சிஜூ, அதே இடத்தில் உயிரிழந்தார். பல்லடம் போலீசார், செல்வகுமாரை கைது செய்தனர்.
செல்வகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.