/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கத்திரியால் குத்தி வாலிபர் கொலை
/
கத்திரியால் குத்தி வாலிபர் கொலை
ADDED : பிப் 21, 2025 07:11 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் அருகே வாலிபரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, பாலாஜி நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன், 40; பனியன் தொழிலாளி. இவரது மனைவி ஷர்மிளாபானு.
அதே பகுதியில் ஷர்மிளா பானுவின் தங்கை யாஸ்மின், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கணவர் வாஜித், 39, பனியன் தொழிலாளி.
ஷர்மிளாபானு, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். கடனுக்கு யாஸ்மின் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார்.
ஷர்மிளா பானு வாங்கிய கடனை சரியாக செலுத்தவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் யாஸ்மினிடம் கடனை செலுத்தும் படி கேட்டுள்ளனர்.
இதனால், இரு குடும்பத்தினருக்குள் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு வாஜித், காஜா மொய்தினுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே வாஜித் துணி வெட்டக்கூடிய கத்திரிக்கோலால் காஜா மெய்தீனை குத்தினார்.
படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, வாஜித்தை கைது செய்தனர்.