/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பழனியப்பா பள்ளியில் மழலையர் விளையாட்டு விழா
/
அவிநாசி பழனியப்பா பள்ளியில் மழலையர் விளையாட்டு விழா
அவிநாசி பழனியப்பா பள்ளியில் மழலையர் விளையாட்டு விழா
அவிநாசி பழனியப்பா பள்ளியில் மழலையர் விளையாட்டு விழா
ADDED : பிப் 16, 2024 01:35 AM

அவிநாசி;அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில், மழலையருக்கான, 'தடம் - 2024' என்ற தலைப்பில் விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வர் அருணாசலம் வரவேற்றார். பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமை வகித்து, பள்ளி கொடியேற்றினார். பள்ளி செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார், நிர்வாக உறுப்பினர்கள் அபிநயா பிரகாஷ், நிவேதா சதீஷ்குமார் ஆகியோர், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரகாஷ், பள்ளி கல்வி இயக்குனர் டாக்டர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். உளவியலாளர் அபிநயா, தேசிய கொடியேற்றினார். அவிநாசி யூனியன் வங்கி மேலாளர் ஜெயந்தி, ஒலிம்பிக் கொடியேற்றினார். மாணவ, மாணவியர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அணிகள் என பிரிந்து, அணிவகுப்பு நடத்தினர்.
குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், சான்றிதழ் வழங்கப்பட்டது. பழனியப்பா மழலையர் பள்ளி முதல்வர் யசோதை மனோகர் நன்றி கூறினார்.