/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்யாசாகர் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு
/
வித்யாசாகர் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு
ADDED : ஜூன் 30, 2025 11:56 PM

திருப்பூர்; திருப்பூர் கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் உள்ள வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் மேல் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் சிவப்ரியா மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் சசிரேகா பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு ஸ்ட்ரைக்கர் மெடிக்கல் டிவிஷன் முதன்மை பொறியாளர் லாவண்யா சுந்தரராஜன் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை, நடனம், கதை சொல்லுதல் ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர். கோடைக்கால விடுமுறை ஒப்படைவினை சமர்ப்பித்த மாணவர்கள் பவிஷ்ணா, அக்சயமதி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.