/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
/
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 15, 2025 11:57 PM

திருப்பூர் : பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகி அம்மாள் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினார். யு.கே.ஜி., முடித்து முதலாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற, 64 மழலையருக்கு சான்றிதழை, தாசில்தார் சந்திரசேகர் வழங்கினார். மாணவர்களின் நடனம், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பள்ளியின் தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா, 'கற்றல் திறனை எளிதாக வளர்க்கும் பருவம், மழைலை பருவம்' என கூறி, மாணவர்களை வாழ்த்தினார். தலைமை ஆசிரியர் பிரேமலதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி முதல்வர் தனலட்சுமி முரளிதரன், வாழ்த்தி பேசினார். மாணவ, மாணவியர், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.