ADDED : நவ 18, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊட்டியை சேர்ந்தவர் பிரசாந்த், 24. திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் விஜயாபுரத்தை சேர்ந்த சேரன், 27. இருவரும் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, மதுக்கடையில் மது அருந்தினர்.
இருவரும் சமமாக பணம் செலவிட்டும், பிரசாந்த் அதிகளவு மதுவை குடித்து விட்டதால், இருவரிடையே தகராறு ஏற்பட்டது. ஆவேசமடைந்த பிரசாந்த் தன்னிடமிருந்த பிளேடால், சேரனை கைமீது குத்தி காயப்படுத்தினார். தெற்கு போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.