/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிஷான் அட்டை சிறப்பு முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
/
கிஷான் அட்டை சிறப்பு முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
கிஷான் அட்டை சிறப்பு முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
கிஷான் அட்டை சிறப்பு முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 11:14 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கவுரவ ஊக்கத் தொகை திட்டத்தில் 2,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இது வரை 19 தவணைகளில் இத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் இணைவதற்கு விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர். அதன்படி விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், இன்று (23ம் தேதி) முதல் 15 நாட்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வி.ஏ.ஓ., அலுவலகங்களில் இம்முகாம் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் விவசாயிகள் தாங்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும். பதிவு செய்யப்படும் விவரங்கள் சரி பார்க்க இந்த எண்ணுக்கு ஓ.டி.பி., அனுப்பப்படும்.
இந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனைத்து திட்டங்களிலும் பயன் பெற முடியும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.