/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜி ராம் ஜி' திட்டத்துக்கு வரவேற்பு; கிசான் சங்கம் தீர்மானம்
/
'ஜி ராம் ஜி' திட்டத்துக்கு வரவேற்பு; கிசான் சங்கம் தீர்மானம்
'ஜி ராம் ஜி' திட்டத்துக்கு வரவேற்பு; கிசான் சங்கம் தீர்மானம்
'ஜி ராம் ஜி' திட்டத்துக்கு வரவேற்பு; கிசான் சங்கம் தீர்மானம்
ADDED : டிச 24, 2025 07:02 AM
உடுமலை: பாரதிய கிசான் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கூட்டம் கொழுமத்தில் நடந்தது.
கூட்டத்தில், தென்னை விவசாயத்தில், தற்போது நோய்த்தாக்குதல், குறைவான விளைச்சல், சந்தை விலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, கொப்பரைக்கான ஆதார விலையை கிலோ ரூ.200 ஆக உயர்த்த வேண்டும்.
விவசாய பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளை, சுட்டுக்கொல்லும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.
விதைப்பு, நடவு அறுவடை காலங்களில், 60 நாட்களுக்கு வேலைவாய்ப்பினை நிறுத்தி வைக்கும் வி.பி-ஜி ராம் ஜி சட்டத்தை வரவேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.