/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கு.க., அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ஊர்வலம்
/
கு.க., அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 20, 2024 11:04 PM

திருப்பூர்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள், சார்பில், 'நன்றி சொல்லும் நேரமிது' எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்க ஊர்வலத்தை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ராமசாமி, குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கவுரி தலைமை வகித்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மகப்பேறு பிரிவு துறைத்தலைவர் மோகனசுந்தரி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை முன்னிலை வகித்தனர்.
'குடும்ப கட்டுப்பாடு பற்றி இணைந்தே பேசுவோம் ; அதனை இன்றே தொடங்குவோம்' எனும் தலைப்பில், நவ., 21ல் துவங்கி, டிச., 4 ம் தேதி வரை விழிப்புணர்வு வார விழா குடும்ப நலத்துறையால் கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, கருத்தரங்கம், ஊர்வலம், ஆண்களுக்கான வாசக்டமி மருத்துவ முகாம் மாவட்டம் முழுதும் நடத்தப்பட உள்ளது. அதன் துவக்கமாக, விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது, என, மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடும்ப நலத்துறை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ராணி, மாவட்ட புள்ளி விபர உதவியாளர் பிரபாகர் ஒருங்கிணைத்தனர்.