/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எம்.சி. சட்டக்கல்லுாரி ரோட்டராக்ட் பதவியேற்பு
/
கே.எம்.சி. சட்டக்கல்லுாரி ரோட்டராக்ட் பதவியேற்பு
கே.எம்.சி. சட்டக்கல்லுாரி ரோட்டராக்ட் பதவியேற்பு
கே.எம்.சி. சட்டக்கல்லுாரி ரோட்டராக்ட் பதவியேற்பு
ADDED : டிச 20, 2025 09:05 AM

திருப்பூர்: பெருமாநல்லுார் கே.எம்.சி. சட்டக்கல்லுாரி ரோட்டராக்ட் சங்க பட்டையத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள், பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3203ன் மாவட்ட ஆளுனர் தனசேகரன் தலைமை விருந்தினராகவும், இதன் முதல் பெண்மணி அமுதாபிரியா சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
கவுரவ விருந்தினர்களாக மாவட்ட ரோட்டராக்ட் தலைவர் ராஜலட்சுமி, பிரதிநிதி செல்வ விக்னேஷ் பெரியநாயகி ஆகியோர் பங்கேற்றனர்.
ரோட்டரி கிளப் ஆப் பெருமாநல்லுார் தலைவர் சசிகாந்த், பிற ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் தலைவர்களுடன் தலைமை தாங்கினார். புதிய சார்டர் தலைவர் அபிநந்தன், அலுவலகப் பொறுப்பாளர்கள் பதவிப்பிரமாணம் ஏற்றனர்.
இதை தொடர்ந்து ரோட்டராக்ட் சங்க முதல் சேவைத்திட்டமாக என்.எஸ்.எஸ். மற்றும் இலவச சட்ட சேவைப்பிரிவு ஆகியவற்றின் இணைப்புடன் ரத்ததான முகாம், கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பெருமாநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அரசு ரத்த வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்டது. 55 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. கே.எம்.சி. சட்ட கல்லுாரி தாளாளர் அருணா ஸ்ரீதேவி, முதல்வர் சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

