/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சியை நோக்கி பின்னலாடை தொழில் பீடுநடை
/
வளர்ச்சியை நோக்கி பின்னலாடை தொழில் பீடுநடை
ADDED : ஜன 26, 2025 11:56 PM

திருப்பூர்; பின்னலாடை தொழிலில், 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி இருக்குமென, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்புகள் சார்பில் அந்தந்த சங்க வளாகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) வளாகத்தில், தலைவர் ஈஸ்வரன் தேசிய கொடியேற்றினார்.
துணைத்தலைவர் பாலச்சந்தர், பொதுச்செயலாளர் கோவிந்தப்பன், முன்னாள் பொதுச்செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
n திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், மூத்த உறுப்பினர் லோகநாதன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தாண்டு, திருப்பூர் கிளஸ்டரில், 15 முதல், 20 சதவீதம் வளர்ச்சி இருக்குமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
மூத்த உறுப்பினர் லோகநாதன் பேசுகையில், ''திருப்பூர் கிளஸ்டர் மற்றும் திருப்பூரின் மேம்பாட்டுக்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இடைவிடாது பாடுபட்டு வருகிறது.
அமெரிக்கா, சீனா, வங்கதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்,'' என்றார்.
திருப்பூரில் உள்ள, சாய ஆலைகள் உட்பட, முன்னணி தொழில் அமைப்புகளின் சங்க அலுவலகத்தில், நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.