தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பின்னலாடை தொழில்?

 பின்னலாடை தொழில்?

 பின்னலாடை தொழில்?


ADDED : மே 13, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல், இதுதொடர்பாக முதல்வருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், 'நிட்மா', 'டீமா', சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், டெக்பா, டெக்மா, சிம்கா உட்பட பல்வேறு சங்கங்களும், தமிழக முதல்வரின் சிறப்பு கவனம் திருப்பூர் தொழில்மீது கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, குறைந்த வாடகையில் வீட்டுவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தொழிலாளர் தங்கும் விடுதிகளுக்கு, குடியிருப்புகளுக்கான மின்சார கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கலாம். ஆடைத் தொழில், புலம்பெயர் தொழிலாளர்கள், குறிப்பாக, பெண் தொழிலாளர்களை சார்ந்திருக்கிறது.

பாதுகாப்பான, நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்க, வீட்டுவசதி அத்தியாவசிமாகிறது. தொழிலாளர் தங்குமிடங்கள் கட்ட, 50 சதவீதம் மூலதன மானியம் வழங்க வேண்டும். மீதியுள்ள திட்ட செலவுகளுக்கான கடன் மீது வட்டி மானியமும் வழங்க வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ., நிதியுதவி ஏற்றுமதி சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதி உதவியை உருவாக்க வேண்டும். வட்டி மானியம் மற்றும் செயல்பாட்டு மூலதனத்துக்கான மேம்படுத்தப்பட்ட கடன் அணுகலை வழங்கலாம். நவீனமயமாக்கல், தானியார் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு மூலதன மானியம் வழங்க வேண்டும்.

உள்கட்டமைப்பு, தளவாடங்கள் துாத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களுக்கான சாலை மற்றும் ரயில் இணைப்பை மேம்படுத்த வேண்டும். ஏற்றுமதி செலவுகளைக் குறைக்கவும், போட்டித்திறனை மேம்படுத்தவும் பல்முனைப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்க வேண்டும்.

எரிசக்தி மற்றும் நிலைத்தன்மை போட்டித்தன்மை வாய்ந்த தொழில்துறை மின் கட்டண செலவுகளை குறைக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சார்ந்த சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும்.

மார்க்கெட்டிங் வசதி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை வர்த்தக இணக்கங்களை எளிமையாக்க வேண்டும். காலவரையறைக்குட்பட்ட ஒப்புதல்களுடன், வலுவான ஒற்றைச்சாளர அனுமதி முறையை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.

ஏற்றுமதி மேம்பாடு திருப்பூரில் சர்வதேச அளவிலான வர்த்தகர் -விற்பனையாளர்- உற்பத்தியாளர் சந்திப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். 'மேடு இன் திருப்பூர்' என்ற புதிய சர்வதேச பிராண்டிங்கை உருவாக்கும் முயற்சிக்கு, தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.

வேண்டும் பனியன் சந்தை திருப்பூர் நகரில் உற்பத்தியாகும், பனியன் ஆடைகள் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் விற்கப்படுகின்றன. பொதுமக்கள், பனியன் ஆடைகளை வாங்கி பயன்படுத்த உள்ளூரில் விற்பனை சந்தை இல்லை. நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், திருப்பூர் நகரின் முக்கிய ரோடு பகுதிகளில், பனியன் மார்க்கெட் அமைக்க வேண்டும். இதன்மூலமாக, மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்; மக்களும் பயன்பெறுவர்.

வாரியம் வேண்டும் மாநில அளவிலான ஆடை மற்றும் ஜவுளி மேம்பாட்டு வாரியத்தை நிறுவ வேண்டும். கட்டமைக்கப்பட்ட அரசு மற்றும் தொழில்துறை ஈடுபாட்டுடன், திருப்பூர் பின்னலாடை மேம்பாட்டு இயக்கத்தை துவக்க வேண்டும்.

வரும், 2030ம் ஆண்டுக்குள், திருப்பூர் கிளஸ்டரில் ஆடை ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். தமிழக அரசின் முன்முயற்சியான ஆதரவுடன், தொலைநோக்குப் பார்வையுடன் கூ டிய திட்ட இலக்கை அடைய முடியும். இதன்மூலமாக, கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதித்துறை, தமிழக அரசுடன் முழுமையாக கைகோர்த்து செயல்பட உறுதி பூண்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் இயங்கும் பின்னலாடை துறைக்கு அரசின் ஆதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் நலன்காக்கும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தி, திருப்பூர் தொழிலில் புதிய திருப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த திருப்பூரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us