/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆலோசனை!: 'சம்பள ஒப்பந்தம் தாமதிக்கக்கூடாது' என தீர்மானம்
/
பின்னலாடை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆலோசனை!: 'சம்பள ஒப்பந்தம் தாமதிக்கக்கூடாது' என தீர்மானம்
பின்னலாடை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆலோசனை!: 'சம்பள ஒப்பந்தம் தாமதிக்கக்கூடாது' என தீர்மானம்
பின்னலாடை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆலோசனை!: 'சம்பள ஒப்பந்தம் தாமதிக்கக்கூடாது' என தீர்மானம்
ADDED : பிப் 19, 2026 05:22 AM

திருப்பூர்: ''சம்பள ஒப்பந்தம் முடிவடைந்து ஐந்து மாதமான பின்பும் உற்பத்தியாளர் சங்கங்கள், ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் காலம் கடத்துவது நியாயம் அல்ல'' என்று பின்னலாடை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பின்னலாடை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம், சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று நடந்தது. பனியன் சங்க(சி.ஐ.டி.யு.) பொதுச் செயலாளர் சம்பத் தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் நாகராஜ் (சி.ஐ.டி.யு.), சேகர், செந்தில்குமார் ( ஏ.ஐ.டி.யு.சி.), ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம்( எல்.பி.எப்.), சிவசாமி, செந்தில்(ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி, கோவிந்தசாமி (எச்.எம்.எஸ்.,) , விஸ்வநாதன், (ஏ.டி.பி.), சந்தான கிருஷ்ணன் (பி.எம்.எஸ்.), சக்திவேல், வெங்கடாசலம்( எம்.எல்.எப்.), மனோகரன் (டி.டி.எம்.எஸ்.) பங்கேற்று பேசினர்.
பின்னலாடை தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து, விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளருக்கு கஷ்டங்கள்
தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவு, வீட்டு வாடகை படி, மருத்துவ செலவு, விழாக்கால செலவினங்களும் உயர்ந்துள்ளன. அவற்றை ஓரளவு ஈடுகட்டும் வகையில் பின்னலாடை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
உற்பத்தியாளர்கள் சங்கங்கள், தங்கள் சிரமங்களை மட்டுமே சொல்லி வருவார்கள்; தொழிலாளர்களின் கஷ்டங்களை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
ஒப்பந்தம் முடிவடைந்து, ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன; காலம் கடத்துவது நியாயம் அல்ல.
24ல் மீண்டும் பேச்சுவார்த்தை
வரும் 24ம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
தொழிலாளர் நலன் கருதி, நியாயமான சம்பள உயர்வு, பஞ்சப்படி உள்ளிட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது சுமூக தீர்வு காண முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---
பின்னலாடை தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் தொடர்பாக, தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

