/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் மட்டூரில் நின்று செல்லும்!
/
கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் மட்டூரில் நின்று செல்லும்!
ADDED : ஜன 29, 2024 11:49 PM
திருப்பூர்;'கொச்சுவேலி - மைசூரு, மயிலாடுதுறை - மைசூரு ரயில் அடுத்த ஆறு மாதங்களுக்கு, மட்டூர் ஸ்டேஷனில் நின்று செல்லும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் மாலை, 4:45 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலியில் புறப்படும் ரயில் (எண்:16316) பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பயணித்து, மறுநாள் காலை, 11:15 மணிக்கு மைசூரு சென்று சேர்கிறது. மைசூரில் மதியம், 12:45 மணிக்கு புறப்படும் (ரயில் எண்:16315), மறுநாள் காலை, 9:15 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
இந்த ரயில், நடப்பாண்டு ஜூலை 29 வரை அடுத்த ஆறு மாதங்களுக்கு, கர்நாடக மாநிலம், ராமநகரம் - மாண்டியா இடையே உள்ள, மட்டூர் ஸ்டேஷனில் நின்று செல்லும்; இருமார்க்கத்திலும் இந்த ரயில் இந்த ஸ்டேஷனில் நிற்கும்.
மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, தர்மபுரி, ஓசூர் வழியாக மைசூருக்கு இயக்கப்படும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16321) மட்டூர் ஸ்டேஷனில் நின்று செல்லும்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மட்டூர். தினசரி, ஆயிரம் பயணிகளுக்கு அதிகமாக வந்து செல்கின்றனர். 20 முதல், 40 ரயில்கள் கடந்து செல்லும் 'சி' கிரேடு ஸ்டேஷனாக உள்ளதால், இங்கு ஆறு மாதங்களுக்கு ரயில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.